5th December Daily Current Affairs – Tamil

இந்திய-சீன விவகாரம்: ஜெய்சங்கர்

  • கிழக்கு லடாக்கில் படிப்படியான நடைமுறையின் மூலம் முழுமையான படை விலக்கல் எட்டப்படுகிறது. டெப்சாங், டெம்சோக்கில் இது உச்சகட்டத்தில் இருக்கிறது.
  • எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை இருதரப்பும் கண்டிப்பாக மதித்து செயல்படுவது, எந்தவொரு தரப்பும் தற்போதைய நிலையை தன்னிச்சையாக மாற்றாமல் இருப்பது, கடந்த காலங்களில் எட்டப்பட்ட உடன்பாடுகள், ஒப்பந்தங்களுக்கு முழுமையாக கட்டுப்படுவது ஆகிய மூன்று கொள்கைகளும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா தெளிவாக உள்ளது.
  • சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே 1962 – ஆம் ஆண்டு நடந்த ஒரு ஆயுத மோதலாகும்.
  • இது சீன-இந்திய எல்லைப் பிரச்சினையின் இராணுவ விரிவாக்கமாகும்.
  • இந்த எல்லையில் பல சர்ச்சைக்குரிய பகுதிகள் உள்ளன.
  • அதன் மேற்கு முனையில் அக்சாய் சின் பகுதி உள்ளது, இது சீன தன்னாட்சிப் பகுதியான சின்ஜியாங் மற்றும் திபெத் இடையே அமைந்துள்ளது.
  • இது 1965 ஆம் ஆண்டில் சீனா தன்னாட்சிப் பகுதியாக அறிவித்தது, கிழக்கு எல்லை, பர்மா மற்றும் பூட்டான் இடையே உள்ளது.
  • கிழக்கு லடாக்கில் உள்ள இந்தியா-சீனாவுக்கு இடையேயான நிர்ணயிக்கப்படாத எல்லைக்கோடு (Line of Actual Control) தொடர்பாக இந்தியா மற்றும் சீனா இடையே ஒரு முக்கிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

கொதிகலன்கள் மசோதா 2024:

  • நூற்றாண்டு பழைமையான கொதிகலன் சட்டத்துக்கு மாற்றாக, கொதிகலன்கள் மசோதா 2024 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
  • கடந்த ஆகஸ்டில் கொதிகலன்கள் மசோதா 2024-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
  • இந்த மசோதா 1923-ஆம் ஆண்டின் கொதிகலன்கள் சட்டத்தை ரத்து செய்யும்.
  • கொதிகலன்களின் ஒழுங்குமுறை, நீராவி கொதிகலன்கள் வெடிக்கும் அபாயத்தில் இருந்து உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாத்தல், கொதிகலன்களுக்குள் பணியாற்றும் நபா்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட அம்சங்கள் புதிய மசோதாவில் இடம்பெற்றுள்ளன.

இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நா. தீா்மானம்: இந்தியா ஆதரவு

  • கிழக்கு ஜெருசலேம் உள்பட 1967-ஆம் ஆண்டு முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்ற ஐ.நா.வின் தீா்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.
  • செனகல் முன்மொழிந்த ‘பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதியான தீா்வு’என்ற வரைவுத் தீா்மானம் 193 உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா.வில் கொண்டுவரப்பட்டது.
  • இதற்கு இந்தியா உள்பட 157 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.
  • அமெரிக்கா, இஸ்ரேல் உள்பட 8 நாடுகள் எதிராக வாக்களித்தன.
  • 7 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தன.
  • ஆக்கிரமிக்கப்பட்ட சிரியாவின் கோலான் பகுதியில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்ற தீா்மானத்திற்கும் இந்தியா ஆதரவாக வாக்களித்தது.
  • இந்த தீா்மானத்துக்கு இந்தியா உள்பட 97 நாடுகள் ஆதரவாகவும், 8 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன.

வா்த்தக வழித்தட திட்டம்: சீனா-நேபாளம் ஒப்பந்தம்

  • சீனா-நேபாளம் இடையே வா்த்தக வழித்தட திட்ட (பிஆா்ஐ) ஒத்துழைப்புக்கான ஆயத்தப் பணிகள் ஒப்பந்தம் கையொப்பமானது.
  • சீனாவை தென்கிழக்கு ஆசியா, மத்திய ஆசியா, ரஷியா, ஐரோப்பிய நாடுகளுடன் இணைக்கும் சாலைப் போக்குவரத்து திட்டமாக ‘பிஆா்ஐ’உள்ளது.
  • இந்தத் திட்டத்துக்கு இந்தியா தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
  • எனினும், பாகிஸ்தான், நேபாளம், மியான்மா், ஆப்கானிஸ்தான் உள்பட 100 – க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
  • நேபாள பிரதமா் கே.பி. சா்மா ஓலி.
  • சீனா அதிபா் ஷி ஜின்பிங்.

டிசம்பர் 5: சர்வதேச தன்னார்வ தினம்

  • சர்வதேச தன்னார்வ தினம், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5 அன்று கொண்டாடப்படுகிறது.
  • இந்த நாள் தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அவர்களின் முயற்சிகளைக் கொண்டாட ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

டிசம்பர் 5: உலக மண் தினம்

  • மண்ணின் முக்கியத்துவம், ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் மனித நல்வாழ்வு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலக மண் தினம் டிசம்பர் 5 அன்று அனுசரிக்கப்படுகிறது.

தகவல் துளிகள்:

  1. 288 உறுப்பினா்களைக் கொண்ட மகாராஷ்டிரத்தின் முதல்வராக தேவேந்திர ஃபட்னவீஸ் தோ்வு செய்யப்பட்டார், மகாராஷ்டிர முதல்வராக மூன்றாவது முறையாக ஃபட்னவீஸ் பதவியேற்கவுள்ளார்.
  2. டிசம்பா் 3 – ஆம் தேதி சா்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
  3. அஸ்ஸாமில் உணவு விடுதிகள் மற்றும் பொது இடங்களில் மாட்டிறைச்சி உணவுகள் விற்க, பரிமாற, சாப்பிட தடை விதிக்கப்படுவதாக அந்த மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா அறிவித்தார்.
  4. சூரியனின் புறவெளியை ஆய்வு செய்ய ப்ரோபா-3 எனும் இரட்டை செயற்கைக்கோளை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் வடிவமைத்து இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் நிலைநிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
  5. தில்லியில் இந்திய வா்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில் 14 ஆவது சா்வதேச விளையாட்டு கருத்தரங்கில் விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலமாக தமிழகத்திற்கு விருது வழங்கப்பட்டது.
  6. “உங்கள் தொகுதியில் முதலமைச்சா்” திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

 

 

 

 

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these