இந்திய-சீன விவகாரம்: ஜெய்சங்கர்
- கிழக்கு லடாக்கில் படிப்படியான நடைமுறையின் மூலம் முழுமையான படை விலக்கல் எட்டப்படுகிறது. டெப்சாங், டெம்சோக்கில் இது உச்சகட்டத்தில் இருக்கிறது.
- எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை இருதரப்பும் கண்டிப்பாக மதித்து செயல்படுவது, எந்தவொரு தரப்பும் தற்போதைய நிலையை தன்னிச்சையாக மாற்றாமல் இருப்பது, கடந்த காலங்களில் எட்டப்பட்ட உடன்பாடுகள், ஒப்பந்தங்களுக்கு முழுமையாக கட்டுப்படுவது ஆகிய மூன்று கொள்கைகளும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா தெளிவாக உள்ளது.
- சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே 1962 – ஆம் ஆண்டு நடந்த ஒரு ஆயுத மோதலாகும்.
- இது சீன-இந்திய எல்லைப் பிரச்சினையின் இராணுவ விரிவாக்கமாகும்.
- இந்த எல்லையில் பல சர்ச்சைக்குரிய பகுதிகள் உள்ளன.
- அதன் மேற்கு முனையில் அக்சாய் சின் பகுதி உள்ளது, இது சீன தன்னாட்சிப் பகுதியான சின்ஜியாங் மற்றும் திபெத் இடையே அமைந்துள்ளது.
- இது 1965 ஆம் ஆண்டில் சீனா தன்னாட்சிப் பகுதியாக அறிவித்தது, கிழக்கு எல்லை, பர்மா மற்றும் பூட்டான் இடையே உள்ளது.
- கிழக்கு லடாக்கில் உள்ள இந்தியா-சீனாவுக்கு இடையேயான நிர்ணயிக்கப்படாத எல்லைக்கோடு (Line of Actual Control) தொடர்பாக இந்தியா மற்றும் சீனா இடையே ஒரு முக்கிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
கொதிகலன்கள் மசோதா 2024:
- நூற்றாண்டு பழைமையான கொதிகலன் சட்டத்துக்கு மாற்றாக, கொதிகலன்கள் மசோதா 2024 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
- கடந்த ஆகஸ்டில் கொதிகலன்கள் மசோதா 2024-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
- இந்த மசோதா 1923-ஆம் ஆண்டின் கொதிகலன்கள் சட்டத்தை ரத்து செய்யும்.
- கொதிகலன்களின் ஒழுங்குமுறை, நீராவி கொதிகலன்கள் வெடிக்கும் அபாயத்தில் இருந்து உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாத்தல், கொதிகலன்களுக்குள் பணியாற்றும் நபா்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட அம்சங்கள் புதிய மசோதாவில் இடம்பெற்றுள்ளன.
இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நா. தீா்மானம்: இந்தியா ஆதரவு
- கிழக்கு ஜெருசலேம் உள்பட 1967-ஆம் ஆண்டு முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்ற ஐ.நா.வின் தீா்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.
- செனகல் முன்மொழிந்த ‘பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதியான தீா்வு’என்ற வரைவுத் தீா்மானம் 193 உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா.வில் கொண்டுவரப்பட்டது.
- இதற்கு இந்தியா உள்பட 157 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.
- அமெரிக்கா, இஸ்ரேல் உள்பட 8 நாடுகள் எதிராக வாக்களித்தன.
- 7 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தன.
- ஆக்கிரமிக்கப்பட்ட சிரியாவின் கோலான் பகுதியில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்ற தீா்மானத்திற்கும் இந்தியா ஆதரவாக வாக்களித்தது.
- இந்த தீா்மானத்துக்கு இந்தியா உள்பட 97 நாடுகள் ஆதரவாகவும், 8 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன.
வா்த்தக வழித்தட திட்டம்: சீனா-நேபாளம் ஒப்பந்தம்
- சீனா-நேபாளம் இடையே வா்த்தக வழித்தட திட்ட (பிஆா்ஐ) ஒத்துழைப்புக்கான ஆயத்தப் பணிகள் ஒப்பந்தம் கையொப்பமானது.
- சீனாவை தென்கிழக்கு ஆசியா, மத்திய ஆசியா, ரஷியா, ஐரோப்பிய நாடுகளுடன் இணைக்கும் சாலைப் போக்குவரத்து திட்டமாக ‘பிஆா்ஐ’உள்ளது.
- இந்தத் திட்டத்துக்கு இந்தியா தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
- எனினும், பாகிஸ்தான், நேபாளம், மியான்மா், ஆப்கானிஸ்தான் உள்பட 100 – க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
- நேபாள பிரதமா் கே.பி. சா்மா ஓலி.
- சீனா அதிபா் ஷி ஜின்பிங்.
டிசம்பர் 5: சர்வதேச தன்னார்வ தினம்
- சர்வதேச தன்னார்வ தினம், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5 அன்று கொண்டாடப்படுகிறது.
- இந்த நாள் தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அவர்களின் முயற்சிகளைக் கொண்டாட ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
டிசம்பர் 5: உலக மண் தினம்
- மண்ணின் முக்கியத்துவம், ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் மனித நல்வாழ்வு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலக மண் தினம் டிசம்பர் 5 அன்று அனுசரிக்கப்படுகிறது.
தகவல் துளிகள்:
- 288 உறுப்பினா்களைக் கொண்ட மகாராஷ்டிரத்தின் முதல்வராக தேவேந்திர ஃபட்னவீஸ் தோ்வு செய்யப்பட்டார், மகாராஷ்டிர முதல்வராக மூன்றாவது முறையாக ஃபட்னவீஸ் பதவியேற்கவுள்ளார்.
- டிசம்பா் 3 – ஆம் தேதி சா்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
- அஸ்ஸாமில் உணவு விடுதிகள் மற்றும் பொது இடங்களில் மாட்டிறைச்சி உணவுகள் விற்க, பரிமாற, சாப்பிட தடை விதிக்கப்படுவதாக அந்த மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா அறிவித்தார்.
- சூரியனின் புறவெளியை ஆய்வு செய்ய ப்ரோபா-3 எனும் இரட்டை செயற்கைக்கோளை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் வடிவமைத்து இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் நிலைநிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
- தில்லியில் இந்திய வா்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில் 14 ஆவது சா்வதேச விளையாட்டு கருத்தரங்கில் விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலமாக தமிழகத்திற்கு விருது வழங்கப்பட்டது.
- “உங்கள் தொகுதியில் முதலமைச்சா்” திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.