4th December Daily Current Affairs – Tamil

வங்கிகள் சட்டத் திருத்த மசோதா:

  • வங்கிக் கணக்குக்கு 4 நியமனதாரர்களை நியமிக்கும் வங்கிகள் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
  • தற்போது வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஒருவர், தனது நியமனதாரராக ஒருவரை மட்டுமே நியமிக்க முடியும்.
  • இதன் மூலம், வங்கிக் கணக்கு வைத்திருக்கும் நபர் உயிரிழந்தால், அவரின் கணக்கில் உள்ள பணத்தை நியமனதாரர் பெற முடியும்.
  • இந்நிலையில், வங்கிகள் சட்டத் திருத்த மசோதாவின்படி வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஒருவர், தனது நியமனதாரர்களாக 4 பேரை குறிப்பிடலாம்.
  • வங்கித் துறையின் நிர்வாக தரநிலைகள், வங்கிகளில் பணம் செலுத்துவோர் மற்றும் முதலீட்டாளர்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துதல், பொதுத் துறை வங்கிகளின் தணிக்கை தரத்தை மேம்படுத்துதல், கூட்டுறவு வங்கிகளின் இயக்குநர்கள் பதவிக் காலத்தை அதிகரித்தல் உள்ளிட்டவை இந்த மசோதாவின் நோக்கம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • கூட்டுறவு வங்கிகளின் இயக்குநர்கள் (தலைவர் மற்றும் முழு நேர இயக்குநர் தவிர) பதவிக் காலத்தை 8 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்க மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது.
  • மாநில கூட்டுறவு வங்கி வாரியத்தில் மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநரும் கடமையாற்ற இந்த மசோதா அனுமதிக்கிறது.
  • இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934, வங்கி ஒழுங்காற்றுச் சட்டம் 1949, பாரத ஸ்டேட் வங்கிச் சட்டம் 1955, வங்கி நிறுவனங்கள் (கையகப்படுத்துதல் மற்றும் பரிமாற்றம்) சட்டம் 1970, வங்கி நிறுவனங்கள் (கையகப்படுத்துதல் மற்றும் பரிமாற்றம்) சட்டம் 1980 ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவர, மொத்தம் 19 திருத்தங்கள் மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளன.
  • ‘பொதுத் துறை வங்கிகளில் மத்திய அரசின் பங்கை 51 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாக குறைத்து, அந்த வங்கிகளை தனியார்மயமாக்குவதே மசோதாவின் நோக்கமாகும்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக மன்மோகன் நியமனம்:

  • உச்சநீதிமன்ற நீதிபதியாக தில்லி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி மன்மோகன் நியமிக்கப்பட்டார்.
  • மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் அளித்த பரிந்துரையின் அடிப்படையில், இந்த நியமனத்தை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு செய்து வைத்தார்.
  • உச்சநீதிமன்றத்தில் மொத்தம் அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதிகள் பணியிடங்களில் தற்போது 2 இடங்கள் காலியாக உள்ளன.
  • தற்போது உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது முறையே 65, 62 என்பது குறிப்பிடத்தக்கது.
  • தற்போதைய இந்தியத் தலைமை நீதிபதியாக நீதியரசர் சஞ்சீவ் கண்ணா என்பவர் நவம்பர் 11, 2024 முதல் பதவியில் உள்ளார்.
  • இவர் இப்பதவியை வகிக்கும் 51 ஆவது தலைமை நீதிபதியாவார்.
  • இந்திய உச்ச நீதிமன்றம் ஜனவரி 28, 1950 இல் நிறுவப்பட்டது.
  • இந்திய உச்சநீதிமன்றத்தின் அதிகபட்ச நீதிபதிகளின் எண்ணிக்கை 36 ஆகும்.
  • நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அடிப்படையில், குடியரசுத் தலைவரின் உத்தரவின் மூலம் மட்டுமே நீதிபதியை பதவி நீக்கம் செய்ய முடியும் என்று அரசியலமைப்புச் சட்டம் வழங்குகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்:

  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திலிருந்து பெயா்கள் நீக்கப்படுவதற்கு மாநில அரசுகளே பொறுப்பு என்று மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சா் சந்திரசேகா் தெரிவித்தார்.
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் 2005 – ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இயற்றப்பட்டது.
  • 2008 முதல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட இது 2009 காந்தியடிகள் பிறந்த நாளன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்று பெயர் மாற்றப்பட்டது.
  • தமிழக கிராமப்புற மக்கள் இதனை 100 நாள் வேலை என்று அழைக்கின்றனர்.
  • இத்திட்டத்தின் கீழ், பொதுவேலை செய்ய விருப்பம் உள்ள கிராமப்புற வயது வந்தவர்களுக்கு, அரசின் குறைந்த ஊதியத்துடன், ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்கு கட்டாய சிறப்புத்திறன் இல்லா உடலுழைப்பு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.
  • ஊரக ஏழை மக்களின் வேலைக்கான உரிமை நிலை நாட்டப்படும்.
  • கிராமப்புற சமூகப் பொருளாதார உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். ஊரக பகுதி மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும்.
  • தனிநபர் இல்ல கழிப்பறைகள் உருவாக்கப்பட்டு கிராமப்புறங்கள் சுகாதார மேம்பாடு அடையும்.
  • ஊரக பகுதிகளில் உள்ள மக்கள் இடம் பெயர்வு குறைவதோடு அவர்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும்.
  • நிழல் தரும் மரங்கள், பயன் தரும் மரங்கள் ஆகியவை நட்டு இயற்கை வளம் மேம்படுத்தப்படும்.

பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட்:

  • சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஐரோப்பிய விண்வெளி மையத்தின் ‘ப்ரோபா 3’ செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.
  • ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்திலிருந்து ராக்கெட் செலுத்தப்படவுள்ளது.
  • இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் கீழ் செயல்படும் ‘நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட்’ நிறுவனம் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
  • இதுவரை 430-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு செயற்கைக்கோள்களை நியூ ஸ்பேஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
  • பெரும்பாலான உலக நாடுகளின் விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளுக்கு இஸ்ரோ பங்களித்து வரும் நிலையில், அண்மையில் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது.
  • ‘ப்ரோபா-3’ எனப்படும் இஎஸ்ஏ நிறுவனத்தின் இரு செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலம் புவியிலிருந்து 60,500 கி.மீ. தொலைவில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தி சூரியனின் புற வெளிக் கதிர்கள் ஆய்வு செய்யப்படவுள்ளன.
  • இரு செயற்கைக்கோள்களும் 150 மீட்டா் தொலைவில் அருகருகே பயணித்து சூரியனின் புறவெளியைச் சுற்றி ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு தரவுகளை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பவுள்ளன.

எண்ணெய் வயல்கள் திருத்த மசோதா:

  • எண்ணெய் வயல்கள் (ஒழுங்குபடுத்துதல் மற்றும் வளா்ச்சி) திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
  • எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு மற்றும் உற்பத்தியை நிர்வகிக்கும் தற்போதைய சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் இந்த மசோதா, கடந்த ஆகஸ்ட் மாதம் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
  • விமான போக்குவரத்துத் துறையில் முதலீடுகளை ஈா்த்து எளிதாக தொழில் செய்வதை ஊக்குவிக்கும் வகையில், 90 ஆண்டுகள் பழைமையான விமான சட்டத்துக்குப் பதிலாக, பாரதிய வாயுயான் விதேயக் 2024 மசோதா கடந்த ஆகஸ்டில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

டிசம்பர் 4: இந்திய கடற்படை தினம்

  • ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4 – அன்று இந்திய கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது.

தகவல் துளிகள்:

  1. மாநில பட்டியலில் இருந்த “கல்வி’ 1976 – ஆம் ஆண்டு அவசரநிலையின்போது ஒத்திசைவுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது.
  2. மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை 100 சதவீதம் நடைமுறைப்படுத்திய முதல் மாநில அரசாக சண்டீகா் உருவெடுத்துள்ளது.
  3. சீனாவுடனான எல்லைப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவதில் இரு தரப்பும் ஏற்றும் கொள்ளும் தீா்வை இந்தியா ஏற்கும் என்றும் மக்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தார்.
  4. வெம்பக்கோட்டை அருகே 3 – ஆம் கட்ட அகழாய்வில் பழங்கால மணிகள், சங்கு வளையல்கள் ஆகியவை கண்டறியப்பட்டன.
  5. ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் சர் டான் பிராட்மேனின் ‘பேக்கி கிரீன்’ தொப்பி ரூ.2.63 கோடிக்கு வாங்கப்பட்டது.
  6. கத்தார் கிராண்ட் ப்ரீயில், நெதா்லாந்து வீரரும், ரெட் புல் டிரைவருமான மேக்ஸ் வொ்ஸ்டாபென் வெற்றி பெற்றார்.

 

 

 

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these