2nd December Daily Current Affairs – Tamil

பிஎஸ்எஃப் தொடக்க தினம்:

  • மத்திய ஆயுதக் காவல் படைகளில் ஒன்றான எல்லை பாதுகாப்புப் படை தொடங்கப்பட்ட தினம் கொண்டாடப்பட்டது.
  • எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force) என்பது இந்திய சர்வதேச எல்லைப்பகுதியைப் பாதுகாக்கும் இந்திய அரசின் மத்திய காவல் ஆயுதப் படைகளில் ஒன்றாகும்.
  • இந்திய துணை இராணுவங்களில் ஒரு பிரிவாகக் கருதப்படும் இப்படை 1 டிசம்பர் 1965ல் உருவாக்கப்பட்டது.
  • மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இப்படைப்பிரிவின் முக்கிய பணி, எல்லை ஊடுருவலைத் தடுப்பதும், எல்லையைப் பாதுகாப்பதுவும் ஆகும்.
  • இதன் முதல் தலைமை இயக்குநராக கே எஃப் ரஸ்டம்ஜி பொறுப்பேற்றார்.
  • 1965 வரை இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியை அந்தந்த மாநில ஆயுதப் படைகளே பாதுகாத்து வந்தன.
  • எல்லை பகுதிகளில் வாழும் மக்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வை ஊக்குவிக்கிறது.
  • எல்லை தாண்டிய குற்றங்கள், ஊடுருவல் போன்றவைகளை தடுக்கிறது.
  • கடத்தல் மற்றும் வேறு எந்த சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கிறது.
  • சமீபகாலங்களில் உள்நாட்டு பாதுகாப்பிற்கும், உள்நாட்டு கிளர்ச்சியைத் தடுக்கவும் செய்கிறது.

இந்தியாவில் எய்ட்ஸ் உயிரிழப்பு 79 % குறைவு:

  • ‘2010-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் ‘எய்ட்ஸ்’ நோயால் ஏற்படும் இறப்புகள் 79 சதவீதம் குறைந்துள்ளது; ‘எச்ஐவி’ தொற்று 44 சதவீதம் குறைந்துள்ளது’ என மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.
  • 2030-ஆம் ஆண்டுக்குள் எய்ட்ஸ் நோயை ஒழிக்கும் ஐ.நா.வின் நிலையான வளா்ச்சி இலக்கை அடைவதில் இந்தியா முழுமையாக உறுதிபூண்டுள்ளது.
  • எய்ட்ஸ் (தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 2017-இன் உதவியுடன் உலகளாவிய சோதனை மற்றும் சிகிச்சை அணுகுமுறையை இந்தியா முன்னெடுத்து வருகிறது.
  • தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்புகள் ‘95-95-95’ என்ற உத்தியை பயன்படுத்தி வருகின்றன.
  • அதாவது, 95 சதவீதம் நோயாளிகள், தங்களுக்கு எச்ஐவி-தொற்று இருப்பதை அறிந்திருக்க வேண்டும், அதில் 95 சதவீதம் போ் சிகிச்சை பெறுவதை உறுதி செய்ய வேண்டும் மற்றும் 95 சதவீதம் போ் ‘ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சை’ மூலம் வைரஸின் தாக்கத்தைக் குறைக்க வேண்டும்.

எண்ணும் எழுத்தும் திட்டம்:

  • தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1, 2, 3-ஆம் வகுப்புகளில் கற்பித்தல், கற்றலின் தரத்தை மேம்படுத்துவதற்காக எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது.
  • 2025-ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தில் உள்ள அனைத்து மாணவா்களும் அடிப்படை கல்வி அறிவு மற்றும் எண்ணியல் திறன்களை அடைவதை உறுதி செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
  • அதன்படி, நடைமுறையில் உள்ள இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மதிப்பீடு மேற்கொள்ளப்பட உள்ளது.
  • இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 135 பள்ளிகள் (சென்னை 136 பள்ளிகள், நீலகிரி 100 பள்ளிகள் தவிர) வீதம் மொத்தம் 5,096 பள்ளிகள் தோ்வாகியுள்ளன.

டிசம்பர் 2: தேசிய மாசுக் கட்டுப்பாட்டு தினம்

  • மாசு மற்றும் அதன் அபாயகரமான விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தேசிய மாசுக் கட்டுப்பாட்டு தினம் டிசம்பர் 2 அன்று கொண்டாடப்படுகிறது.
  • மிகப்பெரிய தொழில்துறை பேரழிவுகளில் ஒன்றாக கருதப்படும் போபால் வாயு பேரழிவில் உயிரிழந்த மக்களின் நினைவாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

டிசம்பர் 2: அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான சர்வதேச தினம்

  • மனித உரிமைகளுக்கு எதிராக செயல்படும் நவீன அடிமைத்தனத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காக டிசம்பர் 2 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.
  • இந்த நாள் அச்சுறுத்தல்கள், வன்முறை, வற்புறுத்தல் அல்லது அதிகார துஷ்பிரயோகம் காரணமாக ஒரு நபர் மறுக்க முடியாத சுரண்டல் சூழ்நிலைகளை நினைவூட்டுகிறது.

டிசம்பர் 2:  உலக கணினி எழுத்தறிவு தினம்

  • இந்தியாவில் முக்கியமாக குழந்தைகள் மற்றும் பெண்களிடையே தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு டிசம்பர் 2 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.

தகவல் துளிகள்:

  1. நாடு முழுவதும் அதிகாரபூா்வமற்ற வகையில் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படும் வக்ஃப் சொத்துகளின் உண்மைத்தன்மை மற்றும் புதுப்பிக்கப்பட்ட விவரங்களை அளிக்குமாறு, வக்ஃப் திருத்த மசோதாவை ஆராய்ந்துவரும் நாடாளுமன்ற கூட்டுக் குழு கோரியுள்ளது.
  2. அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த காஷ் படேலை புதிய அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
  3. ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் 59-ஆவது அகில இந்திய காவல்துறை தலைமை இயக்குநா்கள்-தலைவா்கள் (டிஜிபி-ஐஜிபி) மாநாடு நடைபெற்றது.
  4. சையது மோடி இன்டா்நேஷனல் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, லக்ஷயா சென், டிரீசா ஜாலி/காயத்ரி கோபிந்த் இணை சாம்பியன் பட்டம் வென்றனா்.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these