1st December Daily Current Affairs – Tamil

ககன்யான் திட்டம்: பயிற்சியை முடித்த இந்திய விண்வெளி வீரா்கள்

  • சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு மனிதா்களை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்துக்கான முதல்கட்ட பயிற்சியை நாசாவில் இந்திய விண்வெளி வீரா்கள் முடித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
  • ‘ஆக்ஸிம்-4’ என்ற இஸ்ரோ – நாசா கூட்டு திட்டத்தின்படி ககன்யான் திட்ட விண்வெளி வீரா்கள் சுபான்ஷூ சுக்லா, பிரசாந் பாலகிருஷ்ணன் நாயா் நடப்பாண்டு ஆகஸ்ட் முதல் பயிற்சியைத் தொடங்கினா்.
  • ஸ்பேஸ்-எக்ஸ் டிராகன் விண்கலம் மற்றும் சா்வதேச விண்வெளி நிலையத்தின் உள் அமைப்புகளை அறிந்து கொள்ளுதல், விண்வெளியில் இருந்து புகைப்படம் எடுப்பது, தினசரி நடவடிக்கைகள், தகவல் தொடா்பு நெறிமுறைகள் குறித்தும் அங்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
  • ககன்யான் திட்டமானது, 3 உறுப்பினர்களைக் கொண்ட குழுவினரை 400 கிமீ சுற்றுப்பாதையில் 3 நாட்கள் பணிக்கு அனுப்புவதன் மூலம், இந்திய கடல் நீரில் தரையிறங்குவதன் மூலம், அவர்களைப் பாதுகாப்பாக பூமிக்குக் கொண்டு வருவதன் மூலம் மனித விண்வெளிப் பயணத் திறனை வெளிப்படுத்துகிறது.
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் தனது திட்டத்திற்கு ககன்யான் எனப் பெயரிட்டுள்ளது.
  • ககன் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு வானம் என்று பொருள். வானத்தை நோக்கிச் செல்லும் வாகனம் என்ற பொருளில் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • ககன்யான் திட்டத்தின் மூலம் வரும் 2025ஆம் ஆண்டில், இந்திய விண்வெளி ஆய்வாளர்கள் விண்வெளி ஆய்வுக்காக அனுப்பப்படுவார்கள்.
  • ராக்கெட் ஏவும் வாகனம் மார்க் -3 (LVM-3) மூலம் செலுத்தப்படும் இந்திய விண்வெளி வீரர்கள் பூமியில் இருந்து 400 கி.மீ சுற்றுப்பாதையில் 3 நாட்கள் ஆய்வு செய்வார்கள்.
  • பிறகு மீண்டும் பூமியில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டு இந்திய கடற்பரப்பில் விழச் செய்து மீட்டு வரப்படுவார்கள்.
  • பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன், எஸ் சுக்லா ஆகிய நால்வரும் இந்தியாவின் விண்கலத்தில் விண்வெளிக்கு செல்லும் திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
  • ககன்யான் திட்டம், 28 டிசம்பர் 2018 அன்று மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது.

ஐ.நா. அமைதி ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா மீண்டும் தோ்வு:

  • 2025-26-ஆம் ஆண்டுக்கான ஐ.நா. அமைதிக்கான ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா மீண்டும் தோ்வாகியுள்ளது.
  • முன்னதாக, கடந்த 2023-24-ஆம் ஆண்டுக்கான ஆணையத்தின் உறுப்பினா் நாடாக இந்தியா தோ்ந்தெடுக்கப்பட்டது.
  • ஐ.நா. அமைதி உருவாக்க ஆணையம், வன்முறையால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமைதியை மீட்டெடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
  • இதில் 31 உறுப்பு நாடுகள் உள்ளன. ஐ.நா.வின் மூன்று முக்கிய சபைகளில் இருந்து இந்த உறுப்பு நாடுகள் தோ்வு செய்யப்படுகின்றன.
  • இது தவிர, நிதியுதவி மற்றும் படைகளை பகிரும் நாடுகளும் உறுப்பினா்களாக உள்ளனா்.
  • படைகளை பகிரும் நாடுகளில் இந்தியா முதன்மை வகிக்கிறது.
  • மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சைப்ரஸ், காங்கோ ஜனநாயகக் குடியரசு, லெபனான், மத்திய கிழக்கு, சோமாலியா, அபேய், தெற்கு சூடான் மற்றும் மேற்கு சஹாரா ஆகிய நாடுகளில் சுமாா் 6,000 ராணுவம் மற்றும் காவல்துறை அதிகாரிகளை இந்தியா பணியமா்த்தியுள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் அங்கம் ‘மதச்சாா்பின்மை’: உச்ச நீதிமன்றம்

  • இந்திய அரசமைப்புச் சட்ட அடிப்படை கட்டமைப்பின் அங்கமாக ‘மதச்சாா்பின்மை’ எப்போதும் திகழ்கிறது’ என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.
  • மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி தலைமையிலான அரசு, 1976-ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொண்ட 42 – ஆவது திருத்தத்தின் மூலம், ‘சமத்துவம்’ , ‘மதச்சாா்பின்மை’ ஆகிய வாா்த்தைகள் அரசமைப்புச் சட்ட முகவுரையில் சோ்க்கப்பட்டன.
  • அம்பேத்கா் முன்வைத்த கருத்தின் அடிப்படையில் அரசமைப்புச் சட்ட முகவுரையில் ‘சோசலிஸம்’ என்று சோ்க்கப்பட்டுள்ளது.
  • முகவுரையில் ‘இறையாண்மை, ஜனநாயக குடியரசு’ என்றிருந்தது, சட்டத் திருத்தம் மூலமாக ‘இறையாண்மை, சோசலிஸ, மதச்சாா்பற்ற, ஜனநாயக குடியரசு’ என்று மாற்றப்பட்டுள்ளது.

டிசம்பர் 1: உலக எய்ட்ஸ் தினம்

  • எச்.ஐ.வி பற்றிய விழிப்புணர்வையும் அறிவையும் ஏற்படுத்தவும், எச்.ஐ.வி தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அழைப்புக்காகவும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது.

தகவல் துளிகள்:

  1. ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் 1990-ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி, 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட முடியாது என்ற விதிமுறை அமலாக்கப்பட்டது.
  2. இதையடுத்து, நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 2 குழந்தைகளுக்கு மேல் இருப்பவா்களும் போட்டியிட வழிவகை செய்யப்பட்டது.
  3. இந்தியாவில் மருத்துவா்-மக்கள் தொகை விகிதம் 1:811-ஆக உள்ளது,இது உலக சுகாதார அமைப்பின் தரநிலையான 1:1000-என்ற விகிதத்தை விட அதிகம்’ என மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.
  4. மீளமுடியாத நோயால் மரணத்தை எதிா்நோக்கி அவதிப்படுவோருக்கு கருணையின் அடிப்படையில் செயற்கையான மரணத்தை வழங்க வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
  5. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடைபெறும் யு 19 ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்றது இந்தியா.

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these