12th November Daily Current Affairs – Tamil

இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை (ஐஆர்டிஏ):

  • காப்பீடு ஆவணத்தில் காப்பீடு தொடா்பான விதிகள் மற்றும் நிபந்தனைகளை அனைவருக்கும் எளிதில் புரியும்படி எளிமையான மொழி நடையில் குறிப்பிட வேண்டும் என்று காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (ஐஆா்டிஏ) அறிவுரைக் குழு வலியுறுத்தியுள்ளது.
  • இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை (ஐஆர்டிஏ) (Insurance Regulatory and Development Authority of India (IRDA), சட்டபூர்வமான தலைமை அமைப்பாகும்.
  • இந்தியாவில் காப்பீட்டுத் தொழிலை ஒழுங்குபடுத்தல் மற்றும் மேம்படுத்தலே இதன் முக்கிய பணியாகும்.
  • இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் மேம்படுத்தும் சட்டம், 1999இன் படி இவ்வமைப்பு செயல்படுகிறது.
  • ஐஏர்டிஏ அமைப்பின் தலைமயகம் ஹைதராபாத்தில் அமைந்துள்ளது.
  • காப்பீட்டு நிறுவனங்களில் காப்புறுதி கட்டணம் செலுத்திய பாலிசிதாரர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், காப்பீட்டு தொழில் நிறுவனங்களுக்குத் தொழில் தொடங்கும் உரிமைகள் வழங்கவும், கண்காணிக்கவும் ஐஆர்டிஏ செயல்படுகிறது.
  • தலைவர் மற்றும் ஐந்து முழு நேர உறுப்பினர்கள், நான்கு பகுதி நேர உறுப்பினர்கள் என அனைத்து உறுப்பினர்களும் இந்திய நடுவண் அரசால் நியமிக்கப்படுகின்றனர்.

உலக வா்த்தக அமைப்பு: உலக வேளாண் ஒப்பந்த விதிகள்

  • உலக வேளாண் ஒப்பந்த விதிகளின் கீழ், இந்தியா உலக வா்த்தகத்தை சிதைப்பதாக உள்ளது என உலக வரத்தக அமைப்பின் உறுப்பு நாடுகளான ஆா்ஜெண்டீனா, ஆஸ்திரேலியா, கனடா, உக்ரைன் மற்றும் அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
  • 1986 முதல் 1988 ஆம் ஆண்டு வரையிலான விலையின் அடிப்படையில் இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு உணவு உற்பத்தி மதிப்பில் 10 சதவீதம் மானியமாக வழங்க வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • 2022-23 ஆம் நிதியாண்டிற்கான அரிசி விவசாயிகளுக்கு கூடுதல் மானியங்களை வழங்குவதற்காக உலக வா்த்தக அமைப்பின் ‘அமைதி விதியை’இந்தியா செயல்படுத்தியது.
  • WTO – என்பது உலகின் மிகப்பெரிய சர்வதேச பொருளாதார அமைப்பாகும்.
  • உலக வர்த்தக அமைப்பு ( WTO ) என்பது சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்ட ஒரு அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.
  • இது சர்வதேச வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் எளிதாக்குகிறது.
  • ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒத்துழைப்புடன் சர்வதேச வர்த்தகத்தை நிர்வகிக்கும் விதிகளை நிறுவவும், திருத்தவும் மற்றும் செயல்படுத்தவும் அரசாங்கங்கள் நிறுவனத்தைப் பயன்படுத்துகின்றன.
  • இது 1994 ஆம் ஆண்டு மராகேஷ் ஒப்பந்தத்தின்படி 1 ஜனவரி 1995 இல் அதிகாரப்பூர்வமாக செயல்படத் தொடங்கியது.
  • இதனால் 1948 இல் நிறுவப்பட்ட கட்டணங்கள் மற்றும் வர்த்தகம் (GATT) மீதான பொது ஒப்பந்தத்தை மாற்றியது.

பள்ளி மாணவிகளுக்கான சுகாதார கொள்கை:

  • பள்ளி மாணவிகளுக்கான தேசிய மாதவிடாய் சுகாதார கொள்கை வகுக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
  • ஆறு முதல் 12 – ஆம் வகுப்பு பள்ளி மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் பயன்படுத்த மத்திய, மாநில அரசுகள் நாப்கின்கள் வழங்க வேண்டும்.
  • அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் உறைவிட பள்ளிகளில் மாணவிகளுக்கு தனி கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
  • தமிழ்நாட்டில் 99.7 சதவீத பள்ளிகளிலும், கேரளத்தில் 99.6 சதவீத பள்ளிகளிலும் மாணவிகளுக்கு தனி கழிப்பறை வசதிகள் உள்ளன.

நவம்பர் 12: உலக நிமோனியா தினம்

  • நிமோனியா மற்றும் அதன் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நவம்பர் 12 – ஆம் தேதி உலக நிமோனியா தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இது ஒரு தீவிரமான, உயிருக்கு ஆபத்தான நுரையீரல் தொற்று ஆகும்.
  • நிமோனியா முதன்மையாக வைரஸ்கள், பாக்டீரியாக்கள் அல்லது பூஞ்சைகளால் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது.
  • பாக்டீரியா நிமோனியாவின் மிகவும் பொதுவான வகை – நிமோகோகல் நிமோனியா ஆகும்.

தகவல் துளிகள்:

  1. மாநிலங்களுக்கிடையே ஆயுத விநியோகத்தில் ஈடுபட்டு வந்த கும்பலை தில்லி காவல் துறையினா்,ஒரு மாதமாக நடைபெற்ற ‘ஆபரேஷன் ஈகிள்’ மூலம் கைது செய்தனர்.
  2. உச்சநீதிமன்றத்தின் 51 – ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்றார்.
  3. சென்னையை தலைமை இடமாகக் கொண்ட பாதுகாப்பு அமைச்சக முப்படைகளின் படைக்கலப் பிரிவு தலைவராக கமடோர் ஜே .சுரேஷ் பொறுப்பேற்றார்.
  4. செயற்கைக்கோள், ராக்கெட் வெப்பநிலை ஆராய்ச்சி மையம் அமைப்பது தொடர்பாக இஸ்ரோவுடன் சென்னை ஐஐடி புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
  5. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) உதவியுடன் சென்னை ஐஐடியில் திரவ மற்றும் வெப்பவியல் சிறப்பு ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது.
  6. ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக, எலீஸ் ஸ்டெஃபானிக்கை டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
  7. ஜப்பான் நாட்டின் பிரதமராக ஷிகெரு இஷிபா மீண்டும் தோ்வு செய்யப்பட்டார்.
  8. மொரீஷியஸ் நாட்டின் பிரதமராகிறார் நவீன் ராம்கூலம்.
  9. சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் போட்டியில் அரவிந்த் சிதம்பரம் வெற்றி பெற்றுள்ளார், சேலஞ்சா்ஸ் பிரிவில் கிராண்ட் மாஸ்டா் பிரணவ் வெற்றிப் பெற்றார்.
  10. இத்தாலியில் தொடங்கியிருக்கும் ஏடிபி ஃபைனல்ஸ் போட்டியில் உலகின் நம்பா் 1 இடத்திலிருக்கும் உள்நாட்டு வீரரான யானிக் சின்னா் வெற்றி பெற்றார்.

 

 

 

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these