25th October Daily Current Affairs – Tamil

நாடாளுமன்ற பொது கணக்குக் குழு:

  • பொதுக் கணக்குக் குழு என்பது இந்திய அரசின் வருவாய் மற்றும் செலவினங்களைத் தணிக்கை செய்யும் நோக்கத்திற்காக இந்திய நாடாளுமன்றத்தால் அமைக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவாகும்.
  • ‘செபி, டிராய் போன்ற ஒழுங்குமுறை அமைப்புகளின் செயல்பாட்டை ஆராய பல்வேறு நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் உள்ளன.
  • தலைமை கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கைகளை பரிசீலிப்பதே நாடாளுமன்ற பொது கணக்குக் குழுவின் பணியாகும்.
  • ஆண்டுதோறும் பொது கணக்குக் குழுவிற்கு மக்களவையிலிருந்து 15 உறுப்பினர்களும், மாநிலங்களவையிலிருந்து 7 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவர்.
  • உறுப்பினர்களின் பதவிக் காலம் ஒரு ஆண்டு ஆகும். குழுவின் தலைவர் மக்களவை சபாநாயகரால் நியமிக்கப்படுகிறார்.
  • 1967 ல் இருந்து குழுவின் தலைவராக எதிர்க் கட்சியிலிருந்து ஒருவர் நியமிக்கப்படுகிறார். அமைச்சர் ஒருவர் இந்த குழுவில் உறுப்பினராக இருக்கமுடியாது.
  • பொதுக் கணக்குக் குழு உறுப்பினர் ஒருவர் அமைச்சராக பதவியேற்றால், அவருக்கு பதில் இக்குழுவிற்கு புதிய உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.
  • இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் சமர்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பொதுக் கணக்கு குழு அரசின் வரவு, செலவுகளை பரிசீலனை செய்யும்.
  • நிதிச் சட்டம் மூலமாக வரி விதிக்கவும் நிதி ஒதுக்கீட்டுச் சட்டம் மூலமாக ஒவ்வொரு அமைச்சகமும் செலவுகளை செய்யவும் பாராளுமன்றம் இந்திய அரசுக்கு அதிகாரங்களை வழங்குகிறது.

இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்(செபி):

  • இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (Securities and Exchange Board of India) இந்தியாவில் பங்குச் சந்தைகள், நிதிச் சந்தைகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகும்.
  • மும்பை நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.
  • செபி சட்டம் 1992, ஏப்ரல் 12, 1992 – இல் இந்தியப் பங்குச் சந்தைக்கான ஒழுங்குமுறை ஆணையமாக இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) நிறுவப்பட்டது.
  • இது இந்திய முதலீட்டு சந்தையில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இந்திய அரசாங்கம் 2014 இல் SEBI க்கு புதிய ஒழுங்குமுறை அதிகாரங்களை வழங்கியது.
  • இது தேடல் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மோசடி சந்தைகள் மற்றும் உள் வர்த்தகம் ஆகியவற்றிற்கு கடுமையான தண்டனைகளைப் பயன்படுத்தவும் அனுமதிக்கிறது.
  • SEBI உலகின் உயர்மட்ட ஒழுங்குமுறை அதிகாரிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது மற்றும் இந்தியப் பத்திரச் சந்தையின் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறையில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

தகவல் துளிகள்:

  1. தில்லியில் 12 – ஆவது போக்குவரத்து உள்கட்டமைப்பு தொழில்நுட்பக் கண்காட்சி நடைபெற்றது.
  2. பிரதமா் நரேந்திர மோடி அக்டோபர் 19 – ஆம் தேதி தில்லியில் தேசிய கற்றல் வாரத்தைத் தொடங்கி வைத்தார், தேசிய கற்றல் வாரத்தில் (கா்மயோகி சப்தா ) 7,50,000 – க்கும் மேற்பட்ட திறன் பயிற்சிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  3. தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள சந்திரசூட் ஓய்வு பெறவுள்ளார், உச்சநீதிமன்றத்தின் 51 – வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பொறுப்பேற்கவுள்ளார்.
  4. ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்.
  5. பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேஸில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
  6. விண்வெளித் துறை சார்ந்த புத்தாக்க நிறுவனங்களுக்கு ஸ்டார்ட்அப் உதவுவதற்காக ரூ 1,000 கோடி துணிகர மூலதன நிதியத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
  7. வயதை தீா்மானிக்கும் ஆவணமாக ஆதாரை ஏற்றுக்கொள்ள முடியாது என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.
  8. நடப்பு உலக சாம்பியன் ஜொ்மனிக்கு எதிரான ஹாக்கி ஆட்டத்தில் இந்தியா வென்றது.

 

 

 

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these