தொழிலக எரிசாராயத்தை முறைப்படுத்தும் அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு: உச்சநீதிமன்றம்
- தொழிலக எரிசாராய உற்பத்தி மற்றும் விநியோகத்தை முறைப்படுத்தும் அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.
- அரசமைப்பு சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் மாநில பட்டியலின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ‘போதை மது’ என்ற சொற்றொடரின் வரம்புக்குள் ‘தொழிலக எரிசாராயம்’ என்பதும் அடங்கும்’ என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.
- தொழிலக வடிவ ‘எத்தில் ஆல்கஹால்’ என்பது 95 சதவீதம் எத்தனாலை உள்ளடக்கிதாகும்.
- மதுவில் இந்த ‘எத்தில் ஆல்கஹால்’ மூலப்பொருள்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
- அரசமைப்பு சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் மாநில பட்டியலின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள 8-ஆவது பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள ‘போதை மது’ என்ற சொல்லில், பொதுமக்களின் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் அனைத்து வகையான மது பானங்களும், மது உற்பத்திக்கான மூலப் பொருள்களும் உள்ளடங்கும்.
- தொழிலக எரிசாராயம் (தொழிலக ஆல்கஹால்) என்பதும் இதில் அடங்கும்.
- எத்தில் ஆல்கஹால் அல்லது எத்தனாலுக்கான சூத்திரம் CH 3 CH 2 OH ஆகும்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்: (ICDS)
- இந்தியாவில் 6 முதல் 23 மாத வரையிலான குழந்தைகளில் 77 சதவீதம் பேருக்கு உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்தபடி சரிவிகித உணவு கிடைப்பதில்லை என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
- ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில் 6 வயது வரையிலான குழந்தைகள், வளர்இளம் பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்கான திட்டமாகும்.
- 1975 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியின் 106 வது பிறந்தநாளில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் பேரின் 33 வட்டாரங்கள் முதன்முறையாக தொடங்கப்பட்டது.
- 2016-2017 நிதியாண்டில் இந்திய அரசு மறுசீரமைக்கப்பட்ட ICDS -யை ஒரு குடையின் கீழ் திட்டமாக மாற்றியது. இந்திய அரசு 2017 ஆம் ஆண்டில், தேசிய ஊட்டச்சத்து குழுமம் (NNM), பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY), மற்றும் ஒரு குடையின் கீழ் ICDS -யில் உள்ளடக்கியது.
- பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) – பொது சுகாதாரத்துறை இயக்குநர் மற்றும் தடுப்பு மருந்து மூலம் 2018-2019 முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- இந்திய அரசால் 1975-ல், குழந்தைகளின் பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிர்த்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் தொடங்கப்பட்டது.
- ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் (ICPS) என்பது மத்திய அரசு நிதியுதவி திட்டமாகும்.
- இத்திட்டதில் கடுமையான மற்றும் பிரச்சனையான சூழ்நிலைகளில் உள்ள குழந்தைகளுக்கான பாதுகாப்பு சூழலை உருவாக்குவதே ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டதின் நோக்கமாகும்.
படேலின் 150-ஆவது பிறந்தநாள்:
- படேல், குஜராத்தின் நாடியாட் பகுதியில் கடந்த அக்டோபா் 31, 1875 – ஆம் ஆண்டு பிறந்தார்.
- இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் இருந்த அவா், 550 – க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இந்திய ஒன்றியத்துடன் இணைத்த பெருமைக்குரியவா்.
- நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் படேலின் அா்ப்பணிப்பை வெளிக்காட்டும் வகையில் மத்திய அரசு கடந்த 2014 – ஆம் ஆண்டு முதல் அவரது பிறந்த நாளை ‘ராஷ்ட்ரீய ஏக்தா திவாஸ்’ அல்லது தேசிய ஒருமைப்பாட்டு தினமாகக் கடைப்பிடித்து வருகிறது.
- சா்தார் வல்லபபாய் படேலின் 150 – ஆவது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு நாடு தழுவிய பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
5 சீன பொருள்களுக்கு இறக்குமதி குவிப்பு தடுப்பு வரி:
- இந்தியாவில் குறைந்த விலையில் அளவுக்கு அதிகமாக குவிக்கப்பட்டு வந்த கண்ணாடி, செல்லோபேன் டிரான்ஸ்பரன்ட் ஃபிலிமின், ஐசோபிரைல் ஆல்கஹால் (கிருமி நாசினி), சல்பா் பிளாக், தொ்மோபிளாஸ்டிக் பாலியூரிதீன் ஆகிய 5 சீனபொருள்களுக்கு ‘இறக்குமதி குவிப்பு தடுப்பு வரி’ விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
- சீனா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து குறைந்த விலையில் பொருள்கள் இந்தியாவுக்குள் குவிக்கப்படுகின்றன.
- இதனால் உள்நாட்டு உற்பத்தியாளா்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா்.
- இதைத் தடுக்கும் நோக்கத்தில் குறிப்பிட்ட பொருள்கள் மீது மத்திய அரசு இறக்குமதி குவிப்பு தடுப்பு வரி விதிக்கிறது.
- பொருள் குவிப்பு தடுப்பு வரி என்பது தங்கள் பொருட்களை நியாயமான சந்தை விலைக்கு குறைவாக விற்று , உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வெளிநாட்டு நிறுவனங்கள் மீது அரசாங்கம் கூடுதல் விதிக்கும் கூடுதல் பாதுகாப்பு சுங்க வரி ஆகும் .
- உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கவும் , சந்தையில் ஏகபோகத்தைத் தடுக்கவும் , வர்த்தக நிலைத்தன்மையை ஏற்படுத்தவும் இத்தகைய வரி விதிக்கப்படுகிறது.
தில்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த செயற்கை மழையை ஏற்படுத்த கோரிக்கை:
- செயற்கை மழை என்பது வளிமண்டலத்தில் இருக்கின்ற மேகங்கள், மழை பெய்ய வேண்டும் என்று நினைக்கின்ற இடத்திற்கு நேர் மேலே வரும்போது வேதிப்பொருட்களை தூவி மழை மேகங்களாக்கி மழை பெய்ய செய்வதாகும்.
- இந்த செயற்கை மழையை உருவாக்குவதற்கு மேகவிதைப்பு (Cloud seeding) எனும் முறை கையாளப்படுகிறது.
- இந்த முறையில் சில்வர் அயோடைடு, சோடியம் குளோரைடு, பொட்டாசியம் அயோடைடு, போன்ற வேதிப்பொருள்கள், துகள் வடிவில் எடுத்துச் செல்லப்பட்டு மேகங்களின் மீது தூவப்படுகின்றன.
- இந்தத் துகள்கள் ஒரு பிடிமானமாகச் செயல்பட்டு, மழைத்துளிகளை ஒன்றிணைக்கின்றன.
- வேதிப்பொருள்கள், ஒரு விமானத்தின் கீழ்ப்பகுதியில் கட்டப்பட்டு, மேகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கே பரப்பப்படுகின்றன.
- சிறு சிறு ராக்கெட்டுகளின் உதவியுடன், இந்த வேதிப்பொருள்கள் மேகங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கே பரப்பப்படுகின்றன.
- பெரிய பெரிய மலைப்பகுதிகளில் சிறிய கோபுரங்கள் (towers) அமைக்கப்படுகின்றன.
- அவற்றில் இந்த வேதிப்பொருள்கள், சேமித்து வைக்கப்படுகின்றன.
- மழை மேகங்கள் அருகில் வரும்போது இந்த கோபுரங்களிலிருந்து, வேதிப்பொருள்கள் வெளியேற்றப்படுகின்றன.
அக்டோபர் 24: ஐக்கிய நாடுகள் தினம்
- ஐநா சாசனம் அமலுக்கு வந்ததன் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24 அன்று ஐக்கிய நாடுகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
அக்டோபர் 24: உலக வளர்ச்சி தகவல் தினம்
- வளர்ச்சிப் பிரச்சனைகள் மற்றும் அவற்றைத் தீர்க்க சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உலகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24 அன்று உலக வளர்ச்சித் தகவல் தினம் கொண்டாடப்படுகிறது.
தகவல் துளிகள்:
- இரு நாடுகளின் மீனவா் பிரச்னை தொடா்பாக, இந்தியா-இலங்கை அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டுப் பணிக் குழுக் கூட்டம் அக்டோபர் 29 – ஆம் தேதி நடைபெறவுள்ளது.
- பேறு கால இறப்புகளைத் தவிர்க்க ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவ மையங்களில் சிகிச்சை வழங்க மக்கள் நல்வாழ்வுத் துறை நடைமுறைப்படுத்தியுள்ளது.
- என்எல்சி சுரங்கங்களுக்கு நட்சத்திர மதிப்பீட்டு விருது, நிலக்கரி அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது.