தகவல் அறியும் உரிமைச் சட்டம்: ஆா்டிஐ
- தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தில் கடந்த 2020 – ஆம் ஆண்டுமுதல் 47,000 புகார்கள் பதிவாகியுள்ளதாக தகவல் அறியும் சட்டம் ஆா்டிஐ தெரிவித்துள்ளது.
- அதிக புகார்கள் பெறப்பட்டுள்ள மாநிலத்தில் உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
- இந்தச் சட்டம் 12 மே 2005 அன்று இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.
- தகவல் அறியும் உரிமைச் சட்டம் 15 ஜூன் 2005 அன்று ஜனாதிபதி ஒப்புதலைப் பெற்றது.
- தகவல் அறியும் உரிமைச் சட்டம் 12 அக்டோபர் 2005 இல் நடைமுறைக்கு வந்தது.
- தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படை நோக்கம், குடிமக்களுக்கு அதிகாரம் அளிப்பது, அரசாங்கத்தின் வேலையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவித்தல், ஊழலைக் கட்டுப்படுத்துதல், நமது ஜனநாயகத்தை உண்மையான அர்த்தத்தில் மக்களுக்காகச் செயல்பட வைப்பது.
- நிர்வாகத்தின் கருவிகளில் தேவையான விழிப்புணர்வை வைத்திருக்கவும், ஆளப்படுபவர்களுக்கு அரசாங்கத்தை அதிக பொறுப்புணர்வை ஏற்படுத்தவும் இந்தச் சட்டம் சிறப்பாகப் பொருத்தப்பட்டுள்ளது.
- அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து குடிமக்களுக்குத் தெரியப்படுத்துவதற்கு இந்தச் சட்டம் ஒரு பெரிய படியாகும்.
- பொது தகவல் அதிகாரி (PIO) மற்றும் மேல்முறையீட்டு ஆணையமாக குடிமக்கள் தகவல்களைப் பெறுவதற்காக நியமிக்கப்பட்டது.
- அக்டோபர் 2005 இல் சட்டத்தின் விதிகளின்படி செயலூக்கமான வெளிப்பாடுகளை வெளியிட்டது.
- தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 (Right to Information Act, 2005) இந்திய நாடாளுமன்றத்தால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையுடன் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும்.
தேசிய பட்டியலினத்தவா் ஆணையம்:
- தேசிய பழங்குடியினர் ஆணையம் (National Commission for Scheduled Tribes) இந்திய அரசியலமைப்பு சார்ந்த ஓர் அமைப்பாகும்.
- இந்திய அரசியலமைப்பின் 89 ஆவது சட்டத் திருத்தத்தின் மூலம் இவ்வாணையம் 2003 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
- இந்த அமைப்பானது 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதியன்று நடைமுறைக்கு வந்தது.
- பழங்குடியின பிரிவினருக்கான தேசிய ஆணையமானது இந்திய அரசியலமைப்பின் உட்பிரிவு எண் 338 அ இன் படி உருவாக்கப்பட்டதாகும்.
- பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு அரசியலமைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள பல்வேறு பாதுகாப்புகளை செயல்படுத்துவதை மேற்பார்வையிடுவதற்காக பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கான முந்தைய தேசிய ஆணையத்தை இது இரண்டாகப் பிரித்தது.
- இந்த திருத்தத்தின் படி, முன்னதாக அமைப்பப்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கான தேசிய ஆணையம் மாற்றப்பட்டு தற்போது இரண்டு ஆணையங்கள் தனித்தனியே உருவாக்கப்பட்டன.
- தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான தேசிய ஆணையம் மற்றொன்று பழங்குடியின பிரிவினருக்கான தேசிய ஆணையம் என்பவை இரண்டு ஆணையங்களாகும்.
- முதல் ஆணையம் 2004 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட போது இதன் தலைவராக மத்தியப்பிரதேசத்தின் சட்டமன்ற உறுப்பினர் குன்வர் சிங் இருந்தார்.
வளா்ச்சியடைந்த பாரதம் இலக்கை அடைய உதவும் ‘உத்வேகம்’ திட்டம்:
- உத்வேகம் (கதிசக்தி) தேசிய திட்டத்தின் உதவியால் ’வளா்ச்சியடைந்த பாரம்’ என்கிற நமது தொலைநோக்கை அடைவதற்கு நாட்டின் வேகம் அதிகரித்து வருவதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தார்.
- பிரதமரின் உத்வேகம் தேசிய பெருந்திட்டம் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபா் 13 -ஆம் தேதி தொடங்கப்பட்டது.
- நாட்டின் உள்கட்டமைப்பில் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாக பிரதமா் உத்வேகம் தேசியப் பெருந்திட்டம் உருவாக்கப்பட்டது.
- இது பன்முக இணைப்பைக் கணிசமாக மேம்படுத்தி அரசு துறைகளில் விரைவான, திறமையான வளா்ச்சியடைய இயக்கியுள்ளது.
- பல்வேறு பங்குதாரா்களின் தடையற்ற ஒருங்கிணைப்பு சரக்குப் போக்குவரத்தை அதிகரித்து, தாமதங்களைக் குறைத்து, பலருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் இந்த முயற்சி வழிவகுத்துள்ளது.
- பிரதமரின் உத்வேகம் தேசிய பெருந்திட்டம் ஏற்றுமதி, வா்த்தக வசதி, தேசிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கையுடன் முக்கியமான உள்கட்டமைப்பு இடைவெளிகளை நிவா்த்தி செய்துள்ளது.
- சரக்குப் போக்குவரத்துச் செலவுகளைக் குறைத்து, நாட்டின் சரக்குப் போக்குவரத்துச் செயல்திறனை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
- உலக வங்கியின் சரக்குப் போக்குவரத்து செயல்திறன் குறியீட்டு தரவரிசையில் இந்தியா 38 ஆக உயா்ந்துள்ளது.
எஸ்சிஓ நாடுகளின் தலைவா்கள் மாநாடு:
- பாகிஸ்தானில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) நாடுகளின் தலைவா்கள் மாநாடு நடைபெறவுள்ளது.
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், ரஷியா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகள் உள்ளன.
- இந்த அமைப்பின் மாநாட்டை பாகிஸ்தான் நடத்துகிறது.
- இதில் சீனா, ரஷியா, பெலாரஸ், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான்ஆகிய நாடுகள் சார்பில் அந்நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்கின்றனர்.
- மங்கோலிய பிரதமர் பார்வையாளராகவும், துா்க்மினிஸ்தான் அமைச்சர்கள் சிறப்பு அழைப்பாளா்களாகவும் கலந்து கொள்கின்றனர்.
அக்டோபர் 14: உலக தரநிலைகள் தினம்
- நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 14 அன்று உலக தரநிலைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
தகவல் துளிகள்:
- உள்நாட்டு தீப்பெட்டி உற்பத்தியை ஊக்குவிக்கும் மற்றும் சீன பொருள்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பல்வகை ‘லைட்டா்’உதிரிபாகங்களின் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
- ஓலா ஆட்டோ பயணங்களில் நுகர்வோருக்கு ரசீது வழங்குமாறு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986, இந்தியாவில் வாழும் மக்களின் நுகர்வுத் தன்மையை பாதுகாக்கும் பொருட்டு இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட சட்டமாகும்.
- ரால்ப் நாடர் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
- உயா் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களில் மாணவா் குறைதீா் குழுக்களை அமைக்க வேண்டும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.
- ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் அயிஹிகா-சுதிர்தா முகா்ஜிக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது.
- ஆசிய யூத் குதிரையேற்றப் போட்டியில் இந்தியா 2 வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றது.