ஜப்பான் அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு:
- ஜப்பானைச் சேர்ந்த நிஹோன் ஹிடாங்க்யோ என்ற அமைப்புக்கு 2024 – ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
- அணு ஆயுதங்கள் இல்லாத உலகை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதற்காக அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஹிரோஷிமா, நாகசாகியில் அணு குண்டால் பாதிக்கப்பட்டோரின் நலனுக்காக நிஹோன் ஹிடாங்க்யோ அமைப்பு தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளது.
- அணு குண்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவே 1956 – ஆம் ஆண்டு நிஹோன் ஹிடாங்க்யோ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
- அணு ஆயுதங்கள் மூலம் ஏற்படும் பேரழிவு மற்றும் அதன்மூலம் ஏற்படும் விளைவுகள் குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த அமைப்பின் நோக்கம்.
- ஹிரோஷிமா, நாகசாகியில் அணு குண்டு விசி அடுத்த ஆண்டுடன் 80 ஆண்டுகள் நிறைவடையவுள்ளன.
‘மாலத்தீவுக்கு நிதியுதவி’: இந்தியா
- மாலத்தீவுக்கு நிதியுதவி அளித்து வரும் இந்தியாவுக்கு, அந்த நாட்டு அதிபா் முகமது மூயிஸ் நன்றி தெரிவித்தார்.
- இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணமாக வந்துள்ள முகமது மூயிஸ், ரூ 400 கோடி கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்ததற்கும், இருதரப்பு கரன்ஸி மாற்று ஒப்பந்தத்தின்படி அமெரிக்க டாலா்/யூரோ மாற்று வழிமுறையின் கீழ் 40 கோடி டாலா் மற்றும் இந்திய ரூபாய் மாற்று வழிமுறையின் கீழ் ரூ 3,000 கோடி கடனுதவியை வழங்கியதற்கும் நன்றி தெரிவித்தார்.
- இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கியின் கடன்வசதியின் கீழ் கட்டப்பட்ட 700 வீடுகள் மாலத்தீவிடம் ஒப்படைக்கப்பட்டன.
- மாலத்தீவில் ‘ரூபே’ அட்டை வாயிலான பரிவா்த்தனை சேவை மற்றும் ஹனிமாதூ விமான நிலையத்தில் இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட புதிய விமான ஓடுதளம் தொடங்கப்பட்டன.
- இதுதவிர இந்திய தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகம், மாலத்தீவு காவல் மற்றும் சட்ட அமலாக்கக் கல்லூரி இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் உள்ளிட்ட 5 ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.
இந்திய அஞ்சல் அமைப்பு:
- இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 – ஆம் தேதி தேசிய அஞ்சல் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
- இந்தியாவின் புது தில்லியை தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய பொதுத்துறை அஞ்சல் அமைப்பு சட்டப்பூர்வ அமைப்பாகும்.
- ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு தபால் சேவையை கொண்டு வந்தனர், டல்ஹவுசி பிரபு இதை 1854 இல் நிறுவினார்.
- தற்போது உலகில் மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அஞ்சல் அமைப்பாகும், மேலும் இது தகவல் தொடர்பு அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது.
- இந்தியாவில் 9 அஞ்சல் மண்டலங்கள், 23 அஞ்சல் வட்டங்கள் மற்றும் ஒரு ராணுவ தபால் அலுவலகம் உள்ளது.
- இந்தியாவின் தபால் நிலையங்கள் 1972 – இல் செயல்படுத்தப்பட்ட 6 இலக்க PIN குறியீடு முறையைப் பயன்படுத்துகின்றன.
- இந்தியாவில் விரைவு அஞ்சல் சேவை 1986 – ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
அக்டோபர் 13: பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான சர்வதேச தினம்
- இயற்கை பேரிடர் குறைப்புக்கான சர்வதேச தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 13 அன்று பேரிடர் குறைப்பு அபாயத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அனுசரிக்கப்படுகிறது.
தகவல் துளிகள்:
- டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக நோயல் டாடா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- பாரிஸ் ஒலிம்பிக்கில் 2024, இந்தியா சார்பில் பங்கேற்ற மனு பாக்கா் மற்றும் மகேஸ்வரி சௌஹான் ஆகியோர் தில்லியில் கௌரவிக்கப்பட்டனா்.
- இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜுக்கு துணை காவல் கண்காணிப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
- லாவோஸ், தாய்லாந்து, நியூசிலாந்து மற்றும் ஜப்பான் நாடுகளின் தலைவர்களுக்கு இந்திய கைவினைப் பொருள்களை பிரதமர் நரேந்திர மோடி பரிசாக வழங்கினார்.
- அமெரிக்க அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக, ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இந்திய-அமெரிக்கன் நிதி திரட்டும் நிறுவனம் தெரிவித்துள்ளது.