‘மலபார்’கடற்படை பயிற்சி: 2024
- 4 நாடுகள் பங்குபெறும் ‘மலபார்’கடற்படை பயிற்சி ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் அக்டோபா் 8 – ஆம் தேதி தொடங்குகிறது.
- கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் நடைபெறும் இந்த பயிற்சியில் இந்தியா உள்பட அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாடுகள் பங்கேற்கின்றன.
- இந்தியா – அமெரிக்கா இடையே கடந்த 1992 – ஆம் ஆண்டு மலபார் பயிற்சி தொடங்கப்பட்டது.
- பிறகு ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இந்தப் பயிற்சி இந்திய பெருங்கடல் மற்றும் இந்தோ-பசிபிக் பெருங்கடல் பிராந்திய பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக நடத்தப்படுகிறது.
பொக்ரானில் வான் பாதுகாப்பு ஏவுகணை சோதனை:
- ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் களப்பகுதியில் 4 – ஆம் தலைமுறை தொழில் நுட்பத்தில் மிகக் குறுகிய தூர ஏவுகணை சோதனையை மூன்று அளவுருகளில் வெற்றிகரமாக பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) முடித்துள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
- தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட மிகக் குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பின் (விஷோர்ட்ஸ்) சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு நடத்தியுள்ளது.
- விஷோர்ட்ஸ் என்கிற இந்த ஏவுகணை மனிதா்களே எடுத்துச் செல்லக் கூடிய வான் பாதுக்காப்பு அமைப்பாகும்.
- இதை இமாரத் ஆராய்ச்சி மையத்துடன் (ஆா்சிஐ) டிஆா்டிஓ ஆயவகங்களுடன் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
- ராணுவத்தின் முப்படைகளும் தொடக்கத்திலிருந்தே இந்த திட்டத்தில் தொடா்பில் இருந்தது.
முதல் ஹைட்ரஜன் ரயில் சோதனை:
- சுற்றுச்சூழலை பாதிக்காத சுத்தமான ஹைட்ரஜன் எரிபொருள் செல் தொழில்நுட்பத்தில் தயாராகவுள்ள ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம் டிசம்பரில் நடைபெற உள்ளது.
- ஜெர்மனி, பிரான்ஸ், சுவிடன் மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக, ஹைட்ரஜன் எரிபொருள் செல் தொழில்நுட்பத்தில் இயங்கும் ரயில்களை இயக்கும் ஐந்தாவது நாடாக இந்தியா மாறுகிறது.
- தற்போதுள்ள டீசல் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் ரயில்களில் ஹைட்ரஜன் எரிபொருள் கலத்தை மீண்டும் பொருத்துவதற்கான ஒரு முன்னோடித் திட்டமாக இதனைக் கொண்டு வந்துள்ளது.
- ஹைட்ரஜன் எரிபொருள் கொண்டு இயங்கும் இந்த ரயிலை வடக்கு ரயில்வே மண்டலத்தின் கீழ் ஹரியாணாவில் உள்ள ஜிந்த் – சோனிபட் வழித்தடத்தில் இயக்க முடிவு செய்துள்ளது.
KAZIND – 2024 கூட்டு ராணுவப் பயிற்சி:
- இந்தியா-கஜகஸ்தான் கூட்டு ராணுவப் பயிற்சியின் 8 – வது பதிப்பு KAZIND – 2024, உத்தரகாண்டில் தொடங்கி செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 13, 2024 வரை நடைபெறுகிறது.
- இந்தியாவுக்கும் கஜகஸ்தானுக்கும் இடையிலான பயிற்சி 2016 – இல் ‘பிரபால் டோஸ்டிக்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டது.
- கூட்டுப் பயிற்சி KAZIND, 2016 – ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
- 120 பணியாளர்களைக் கொண்ட இந்திய ஆயுதப் படைகள், இந்திய ராணுவத்தின் குமாவோன் படைப்பிரிவின் பட்டாலியன் மற்றும் பிற ஆயுதங்கள் மற்றும் சேவைகள் மற்றும் இந்திய விமானப்படையைச் சேர்ந்த பணியாளர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன.
அக்டோபர் 6: உலக பெருமூளை வாதம் தினம்
- உலக பெருமூளை வாதம் தினம் அக்டோபர் 6 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
தகவல் துளிகள்:
- நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்டிருந்த சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருது திரும்பப் பெறப்பட்டது.
- அனைத்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களிடையே தலைமைப் பண்பை வளா்க்கும் வகையில் மாணவா் குழு அமைப்பு ‘மகிழ் முற்றம்’என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
- 15 – ஆவது முறையாக இரானி கோப்பையை வென்றது மும்பை, மும்பை அணி 27 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இரானி கோப்பையை வென்றுள்ளது.
- இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை பிரான்ஸ் நிறுத்தியதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.