23rd September Daily Current Affairs – Tamil

 

நிலவின் தென் துருவத்தில் 160 கி.மீ பள்ளம்: பிரக்யான் ரோவர்

  • நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய சந்திரயான் – 3 செயற்கைக் கோள் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு வருகிறது.
  • நிலவின் தென் துருவத்தில் 160 கி.மீ பரப்பளவில் புதிய பள்ளத்தை சந்திரயானின் பிரக்யான் ரோவர் விண்கலம் கண்டுபிடித்துள்ளது.
  • இந்தப் பள்ளம் எய்ட்கென் பேசின் பள்ளத்தாக்கு உருவாவதற்கு முன்னரே உருவானதாகவும், இது நிலவின் மிகப் பழமையான புவியியல் அமைப்பாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
  • தென் துருவத்தில் உள்ள எய்ட்கென் பேசின் பகுதியில் 1400 மீட்டர் அளவிலான பாறைகளின் சிதைவுகளும் நூற்றுக்கணக்கான பள்ளங்களும் இருக்கின்றது.
  • சந்திரயான் -3 செயற்கைக் கோள் துல்லியமான சுற்றுப்பாதையில் ஜூலை 14 , 2023 அன்று வெற்றிகரமாகச் செலுத்தியது.
  • சந்திரயான் 3 நிலவில் இறங்கிய நாள் ஆகஸ்ட் 23-ம் தேதி, தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்பட உள்ளது.
  • நிலவில் உள்ள இடங்களை ஷிவ் சக்தி புள்ளி (சந்திரயான் -3) மற்றும் திரங்கா புள்ளி (சந்திரயான் -2) என்றும் அழைக்கப்படுகிறது.
  • சந்திரயான் – 3 திட்ட இயக்குனர் – வீரமுத்துவேல்.

அமெரிக்க-இந்திய ராணுவத்துக்கான செமிகண்டக்டா் தயாரிப்பு ஆலை:

  • அமெரிக்க ராணுவம் மற்றும் இந்திய பாதுகாப்புப் படைகளின் பயன்பாட்டுக்கான செமிகண்டக்டா் தயாரிப்பு ஆலை கொல்கத்தாவில் அமைக்கப்படவுள்ளது.
  • இது தொடா்பான ஒப்பந்தம், பிரதமா் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் முன்னிலையில் கையொப்பமானது.
  • அமெரிக்க ராணுவத்தின் ஆதரவுடன் சக்தி’ என்ற பெயரில் அடுத்த ஆண்டில் அமைக்கப்படும் இந்த ஆலை, நாட்டின் பாதுகாப்பு துறைக்கான முதல் செமிகண்டக்டா் ஆலை என்ற சிறப்பை பெறவுள்ளது.
  • இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் எரிக் கார்செட்டி.
  • சா்வதேச விண்வெளி நிலையத்தில் 2025 – ஆம் ஆண்டில் இந்தியாவின் இஸ்ரோவும் அமெரிக்காவின் நாசாவும் கூட்டாக மேற்கொள்ளவிருக்கும் முதல் ஆராய்ச்சி நடைபெற உள்ளது.

இந்தியாவில் க்வாட் மாநாடு: 2025

  • இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் க்வாட் கூட்டமைப்பின் 4-ஆவது உச்சிமாநாடு, அமெரிக்காவின் டெலாவா் மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் நடைபெற்றது.
  • 2025 – இல் க்வாட் தலைவர்கள் உச்சிமாநாட்டை இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
  • அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளும் 2007 -இல் ஏற்படுத்திக் கொண்ட ஒரு கூட்டணிதான் “க்வாட்’ ஆகும்.
  • இந்தோ – பசுபிக் பெருங்கடல் உள்ளடக்கிய பகுதிகளில் க்வாட் உறுப்பு நாடுகள் சுதந்திரமாக செயல்படுவதற்காக அமைக்கப்பட்டது.

செப்டம்பர் 23: சைகை மொழிகளுக்கான சர்வதேச தினம்

  • உலகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23 – ஆம் தேதி சைகை மொழிகளுக்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இத்தினத்தின் நோக்கமானது காது கேளாதவர்களின் சைகை மொழிகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவதாகும்.

தகவல் துளிகள்:

  1. இந்திய திரையுலகின் படைப்பாற்றல் மிக்க திரைப்பட நடிகா் மற்றும் நடனக் கலைஞருக்கான கின்னஸ் உலக சாதனை சான்றிதழை சிரஞ்சீவி பெற்றார்.
  2. இலங்கை அதிபா் தோ்தலில் தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளா் அநுரகுமார திஸ்ஸநாயக, அந்நாட்டின் 9 – ஆவது அதிபராக பதவியேற்றார்.
  3. ராஜஸ்தான் மாநிலத்தில் ‘தாயின் பெயரில் மரம் நடும் இயக்கம்’ மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிபடுத்துவதில் ‘குடிமக்களின் பங்களிப்பு மற்றும் பொறுப்பு’ ஆகிய முன்னெடுப்புகளின்கீழ் 5 லட்சம் மரக்கன்றுகள் நட்டு உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
  4. நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ – 9பி ஆளில்லா விமானங்களை அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது.
  5. ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டில், 45 – ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தங்கம் வென்றது.
  6. துலிப் கோப்பையில் இந்தியா ஏ அணி சாம்பியன் பட்டம் வென்றது.

 

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these