16th August Daily Current Affairs – Tamil

 

 

அத்திக்கடவு-அவிநாசி திட்டம்:

  • ஈரோடு, திருப்பூா், கோவை மூன்று மாவட்டங்களின் கனவுத் திட்டமான அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
  • கோவை, திருப்பூா், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களைச் சோ்ந்த குளம், குட்டைகளில் நீா் நிரப்பி அதன் மூலமாக நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துவது மற்றும் விவசாயம், குடிநீா் உள்ளிட்ட தேவைகளுக்காக தொடங்கப்பட்டதுதான் அத்திக்கடவு-அவிநாசி திட்டம்.
  • கடந்த 2019 – ஆம் ஆண்டு பிப்ரவரி 28 – ஆம் தேதி அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்காக முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி அவிநாசிக்கு நேரில் வந்து அடிக்கல் நாட்டினார்.

முதல்வா் மருந்தகம்” புதிய திட்டம்:

  • குறைந்த விலையில் மருந்துகள் வழங்க ‘முதல்வா் மருந்தகம்’ எனும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
  • பொதுப்பெயா் வகை மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் வகையில், ‘முதல்வா் மருந்தகம்’ என்ற புதிய திட்டத்தை அரசு செயல்படுத்தும்.
  • இந்தத் திட்டத்தின்கீழ், முதல்கட்டமாக 1,000 மருந்தகங்கள் திறக்கப்படும்.
  • இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மருந்தாளுநா்கள், கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடனுதவியோடு ரூ 3 லட்சம் மானிய உதவியாக அரசால் வழங்கப்படும்.

முதல்வரின் காக்கும் கரங்கள்திட்டம்:

  • முன்னாள் ராணுவ வீரா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ எனும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
  • இந்தத் திட்டத்தின்கீழ், முன்னாள் படைவீரா்கள் தொழில் தொடங்க ரூ 1 கோடி வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழி செய்யப்படும்.
  • இந்தத் திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் அளிக்கப்படும்.
  • அவா்களுக்கு திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி போன்றவை அரசால் வழங்கப்படும்.
  • ராணுவப் பணியின் போது உயிரிழந்த படைவீரா்களின் குடும்பத்தினரும் இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெறலாம்.

கோவைக்கு சிறந்த மாநகராட்சி விருது:

  • கோவை மாநகராட்சிக்கு சிறந்த மாநகராட்சிக்கான விருதை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
  • உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கிலும், அவற்றின் செயல்பாடுகளின் அடிப்படையில் அவற்றிற்கிடையே போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கும் நோக்கிலும் ஆண்டுதோறும் சிறந்த உள்ளாட்சி அமைப்புகள் தோ்வு செய்யப்பட்டு, முதல்வரின் விருது வழங்கப்பட்டு வருகிறது.
  • அதன் அடிப்படையில், நடப்பு ஆண்டு தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக கோவை மாநகராட்சி தோ்வு செய்யப்பட்டுள்ளது.

எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட்:

  • புவிக் கண்காணிப்புக்கான இஓஎஸ்-08 செயற்கைக்கோளுடன் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஆகஸ்ட் 16 விண்ணில் ஏவப்பட உள்ளது.
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் புவிக் கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இஒஎஸ்-08 எனும் செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இது தரையில் இருந்து சுமார் 475 கி.மீ. தொலைவில் உள்ள புவி தாழ் வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
  • இஒஐஆா் கருவி பேரிடா் மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, இரவில் துல்லியமான படம் எடுக்க அனுப்பப்படுகிறது.

குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழா்விருது:

  • குமரி அனந்தனுக்கு ‘தகைசால் தமிழா்’ விருதை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
  • அறிவியல் தொழில்நுட்பத்துக்கான ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பெயரிலான விருதை இஸ்ரோ விஞ்ஞானி சந்திரயான் 3 திட்ட இயக்குநராகப் பணியாற்றிய ப.வீரமுத்துவேல் பெற்றார்.
  • வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மக்களுக்கு முதலுதவி பெட்டியை எடுத்துக் கொண்டு துணிச்சலுடன் சென்ற நீலகிரி மாவட்ட செவிலியா் ஆ.சபீனா, துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு தோ்வு செய்யப்பட்டார்.

ஆகஸ்ட் 16: பென்னிங்டன் போர் தினம்

  • பென்னிங்டன் போர் தினம் 16 ஆகஸ்ட், 1777 அன்று நடந்த பென்னிங்டன் போரை கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 16 அன்று அனுசரிக்கப்படுகிறது.

தகவல் துளிகள்:

  1. ஒடிசாவில் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கப்படுவதாக மாநில துணை முதல்வர் பிராவதி அறிவித்துள்ளார்.
  2. கால தாமதமில்லா ரயில் இயக்கத்தில் மதுரை ரயில்வே கோட்டம் தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளது.
  3. டாக்டா் என்.கோபாலகிருஷ்ணனுக்கு நல் ஆளுமை விருதை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
  4. 2036 – ஒலிம்பிக் போட்டியை நடத்துவதில் அகமதாபாத் நகரம் முன்னணியில் உள்ளது.
  5. பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை பாரீஸில் நடைபெறவுள்ளது.
  6. இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷியாவின் பங்களிப்பு 1 சதவீதமாக இருந்தது. இப்போது 40 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  7. ஆந்திரத்தில் ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் உணவளிக்கும் ‘அண்ணா உணவகத்தை’ அந்த மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்.
  8. நாட்டின் 78-ஆவது சுதந்தர தினத்தையொட்டி,முதல்முறையாக இந்திய-வங்கதேச பெண் பிஎஸ்எஃப் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these