தமிழக நஞ்சராயன், கழுவேலி பறவைகள் சரணாலயங்கள் ராம்சர் தளங்களில் சேர்ப்பு:
- தமிழகத்தின் நஞ்சராயன், கழுவேலி பறவைகள் சரணாலங்கள் உள்ளிட்ட நாட்டின் 3 சதுப்பு நிலங்கள் புதிதாக ராம்சா் தளங்களில் சோ்க்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாட்டுத் துறை அமைச்சா் பூபேந்திர யாதவ் அறிவித்தார்.
- இதன் மூலம் நாட்டில் 13,58,068 ஹெக்டோ் பரப்பளவைக் கொண்ட ராம்சா் தளங்கள் எண்ணிக்கை 85-ஆக அதிகரித்துள்ளது.
- சதுப்பு நிலக்காடுகள் அழிவை தடுக்கவும் அதை பாதுகாத்து மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த ‘ராம்சா்’ என்கிற சா்வதேச அமைப்பு செயல்படுகிறது.
- ஈரான் நாட்டின் ராம்சா் நகரில் 1971- ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவின்படி அந்நகரில் பெயரில் இந்த அமைப்பு செயல்படுகிறது.
- உலகளாவிய உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், அந்தந்த பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்வாதாரங்களை நிலை நிறுத்த சதுப்பு நிலங்களின் சா்வதேச வலையமைப்பு உருவாக்கப்பட்டது.
- இந்தியாவில் இதுவரை 82 சதுப்பு நிலங்கள் ராம்சா் தளங்களாக அறிவிக்கப்பட்டிருந்தது.
- தற்போது இது 85 -ஆக அதிகரித்துள்ளது, குறிப்பாக 2013 வரை 26 இடங்கள் மட்டுமே ராம்சா் பட்டியலில் இடம் பெற்றிருந்தது.
- ஆனால் 2014-ஆம் ஆண்டிற்கு பின்னா் கடந்த 10 ஆண்டுகளாக 59 இடங்கள் சோ்க்கப்பட்டுள்ளன.
- தமிழகத்தில் உள்ள நஞ்சராயன் பறவைகள் சரணாலயம், கழுவேலி பறவைகள் சரணாலயம், மத்தியப் பிரதேசத்தில் உள்ள தவா நீா்த்தேக்கம் ஆகிய மூன்று புதிய தளங்கள் நிகழாண்டில் ராம்சா் தளங்களாக சோ்க்கப்பட்டுள்ளன.
- தற்போது நாட்டிலே தமிழகத்தில் தான் அதிகபட்சமாக 18 ராம்சா் தளங்கள் உள்ளன.
- அடுத்த நிலையில் உத்தர பிரதேசத்தில் 10 தளங்கள் உள்ளன.
நஞ்சராயன் பறவைகள் சரணாலயம்:
- திருப்பூா் – ஊத்துக்குளி பிரதான சாலையில், அமைந்துள்ள நஞ்சராயன் ஏரி, 125.865 ஹெக்டோ் பரப்பளவில் உள்ளது.
- 1498- ஆம் ஆண்டு கட்டப்பட்டு இப்பகுதியை ஆண்ட நஞ்சராயன் என்ற மன்னரால் சீரமைக்கப்பட்டு அவரது பெயரிடப்பட்டது.
- இந்த ஏரி வளமான விலங்கின பன்முகத்தன்மை காரணமாக கடந்த 2022- ஆம் ஆண்டு தமிழகத்தின் 17- ஆவது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கழுவேலி பறவைகள் சரணாலயம்:
- புதுச்சேரிக்கு வடக்கே விழுப்புரம் மாவட்டத்தில் வானூா் வட்டத்தில் கோரமண்டலம் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு உவா் ஏரியாகும்.
- இது 5,151.6 ஹெக்டோ் பரப்பளவில் ஆழமற்ற ஏரியாக கழுவேலி பறவைகள் சரணாலயம் உள்ளது.
- 2021 – ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் 16 – ஆவது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
- வங்கக் கடலில் உப்புகல்லி சிற்றோடை – எடையந்திட்டு முகத்துவாரம் ஆகியவற்றால் இந்த ஏரி இணைக்கப்பட்டுள்ளது.
- உவா், நன்னீா், கடல் நீா் என மூன்று விதமான நீா் அம்சங்களின் அடிப்படையில் இந்த ஏரி இருக்கிறது.
- நாட்டின் தீபகற்பத்தில் பல்லுயிர் நிறைந்த மிகப்பெரிய சதுப்பு நிலங்களில் ஒன்று கழுவேலி.
- மத்திய ஆசிய பறக்கும் பாதையில் அமைந்துள்ள கழுவேலி பறவைகள் சரணாலயத்தில் புலம் பெயரும் பறவை இனங்களுக்கு ஒரு முக்கியமான நிறுத்த இடமாக உள்ளது.
தவா நீா்த்தேக்கம்:
- மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இட்டார்சி நகருக்கு அருகே தவா , டென்வா ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் உள்ளது தவா நீா்த்தேக்கம்.
- தவா ஏரி நீா் பரப்பு 20,050 ஹெக்டேராகவும் நீா்ப்பிடிப்புப் பகுதி 5,98,290 ஹெக்டேராகவும் உள்ளது.
- பல அரிய மற்றும் ஆபத்தான தாவர இனங்கள், ஊா்வன மற்றும் பூச்சிகள் இங்கு காணப்படுகின்றன.
- இப்பகுதி சுற்றுச்சூழல், தொல்லியல், வரலாற்று மற்றும் வனவியல் கண்ணோட்டத்தில் பல தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது.
குயிலியின் வரலாற்று மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு:
- தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட மங்கை குயிலியின் ஆங்கில குறுங்காவிய மூலத்தின் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, பிரஞ்ச் மொழிபெயர்ப்பை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தில்லியில் வெளியிட்டார்.
- நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் முதல் பெண் போராளியான ராணி வேலு நாச்சியாரின் மகளிர் படைத் தளபதியாக இருந்த குயிலி என்கிற வீர மங்கையின் வரலாற்றுக் கதை “தி பாலட் ஆஃப் த வாரியர் கேர்ல் குயிலி’ என்கிற தலைப்பில் கே.ரவி ஆங்கிலக் கவிதை வடிவில் எழுதியிருந்தார்.
- ஆங்கில குறுங்காவியத்தை தமிழ், ஹிந்தி, தெலுங்கு மற்றும் பிரெஞ்ச் மொழிகளில் முறையே இலந்தை ராமஸ்வாமி, என். லட்சுமி ஐயர், டோடா சேசு பாபு, கே.புகழேந்தி உள்ளிட்டோர் மொழிபெயர்த்திருந்தனர்.
ஆகஸ்ட் 15: இந்திய சுதந்திர தினம்
- 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரமடைந்ததை நினைவுகூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்திய சுதந்திர தினம் அனுசரிக்கப்படுகிறது.
- இந்தியா தனது 78 – வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது.
தகவல் துளிகள்:
- செங்கோட்டையில் 11-ஆவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார்.
- ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ் படைப் பிரிவைச் சேர்ந்த கர்னல் மன்பிரீத் சிங், மேஜர் ராமகோபால் நாயுடு, ரவிக்குமார், ஹிமாயுன் முஸ்ஸாமில் பட் ஆகிய நால்வருக்கு கீர்த்தி சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆற்றில் மிதக்கும் நெகிழிகளை ஈா்க்கும் சாதனம் உருவாக்கிய காரைக்காலில் உள்ள என்ஐடி புதுச்சேரி சிவில் என்ஜினியரிங் குழுவுக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.
- மத்திய உள் துறை செயலாளராக கோவிந்த் மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- அமலாக்கத் துறையின் புதிய இயக்குநராக ராகுல் நவீன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- இந்திய ஹாக்கியின் சீனப் பெருஞ்சுவா் என்று அழைக்கப்படும் ஸ்ரீஜேஷ், சமீபத்தில் ஓய்வுபெற்ற நிலையில், அவரை கௌரவிக்கும் விதமாக அவரின் ஜொ்ஸி எண் ‘16’-ஐ ஹாக்கி இந்தியா அமைப்பு விடுவித்தது.