15th July Daily Current Affairs – Tamil

காப்பீட்டு சட்டத் திருத்த மசோதா:

  • பட்ஜெட் கூட்டத் தொடரில் காப்பீட்டு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  • இதன் மூலம் 2047-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைவருக்கும் காப்பீடு அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • பட்ஜெட் கூட்டத் தொடா் ஜூலை 22-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
  • காப்பீட்டு சட்டம் 1938 – இல் சில முக்கியத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
  • ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு, வாகனக் காப்பீடு என பல்வேறு காப்பீடுகளை ஒரே நிறுவனம் மேற்கொள்ளலாம் என சட்டம் திருத்தப்பட இருக்கிறது.
  • இப்போதைய நிலையில் ஆயுள் காப்பீட்டில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட பிற காப்பீடுகளை விற்பனை செய்ய முடியாது.
  • நாட்டில் உள்ள அனைவருக்கும் 2047-ஆம் ஆண்டுக்குள் காப்பீடு கிடைக்க வேண்டும் என்ற அரசின் இலக்கை எட்ட முடியும்.
  • தற்போது இந்தியாவில் 25 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும், 32 பிற பொதுக் காப்பீட்டு நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.

முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்சம் – உச்சநீதிமன்ற தீா்ப்பு:

  • குற்றவியல் நடைமுறைச் சட்ட (சிஆா்பிசி) பிரிவு 125-இன்கீழ், முஸ்லிம் பெண்களும் ஜீவனாம்சம் (பராமரிப்புத் தொகை) கோரலாம் என்ற முக்கியத்துவம் வாய்ந்த தீா்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.
  • அனைத்து மதத்தைச் சோ்ந்த திருமணமான பெண்களுக்கும் இந்த சட்டப் பிரிவு பொருந்தும் என்று தீா்ப்பில் குறிப்பிடப்பட்டது.

ஷா பானு வழக்கு:

  • விவாகரத்துக்குப் பின்பு மனைவிக்கு முஸ்லிம் கணவா் ஜீவானம்சம் வழங்க வேண்டும் என கடந்த 1985-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது
  • இந்தத் தீா்ப்புக்கு வடிவம் கொடுக்கும் வகையில் அப்போதைய பிரதமா் ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில், இஸ்லாமிய பெண்கள் (விவாகரத்தைப் பாதுகாக்கும் உரிமை) சட்டம் 1986-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
  • இந்தச் சட்டத்தை கடந்த 2001-ஆம் ஆண்டு தில்லி உயா்நீதிமன்றம் உறுதிசெய்தது.
  • இது, இஸ்லாமிய பெண்கள் திருமணம் மற்றும் விவாகரத்தில் சம உரிமை பெறவும் வழிவகை செய்தது.

பிரதமரின் மரம் நடும்முன்னெடுப்பு:

  • உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 140 கோடி மரக்கன்றுகள் நடும் ‘தாயின் பெயரில் ஒரு மரம்’ முன்னெடுப்பை பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஜூன் 5-ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
  • பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைத்த ‘தாயின் பெயரில் ஒரு மரம்’ முன்னெடுப்பு பருவநிலை மாற்றத்தின் சவால்களுக்கு தக்க பதிலடியாக அமைந்துள்ளது.
  • மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஒரே நாளில் 11 லட்சம் மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சியை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தொடங்கி வைத்தார்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்:

  • தமிழகத்தில் உள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 15 இல் தொடங்கி வைக்கவுள்ளார்.
  • முதல்வரின் காலை உணவு திட்டம், முதல் கட்டமாக 9.2022 இல் 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தொடங்கி வைக்கப்பட்டது.
  • முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில், முதல்வர் மு.க.ஸ்டாலினால் 30,992 அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் பயன் பெறும் வகையில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, தொடங்கி வைக்கப்பட்டது.
  • காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 இல் திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கவுள்ளார்.
  • இந்தத் திட்டத்தின் மூலம் 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 23 லட்சம் மாணவர்கள் பயனடையவுள்ளனர்.

கல்வி வளர்ச்சி நாள்: ஜூலை 15

  • தமிழகமானது காமராசரின் பிறந்த தினமான ஜூலை 15 ஐ ‘கல்வி தினம்’ அல்லது ‘கல்வி வளர்ச்சி தினமாக’ அனுசரிக்கிறது.
  • 2006 – ஆம் ஆண்டு முதல் இத்தினம் கல்வி வளர்ச்சி தினமாக அனுசரிக்கப் படுகிறது.

உலக இளைஞர் திறன்கள் தினம்: ஜூலை 15

  • உலக இளைஞர் திறன்கள் தினம் 2024 ஜூலை 15 இல் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டு நிகழ்வின் கருப்பொருள்: “அமைதி மற்றும் வளர்ச்சிக்கான இளைஞர் திறன்கள்” என்பதாகும்.

தகவல் துளிகள்:

  1. பிரதமர் நரேந்திர மோடியின் எக்ஸ் வலைதள கணக்கை 10 கோடி பேர் பின்தொடர்கிறார்கள், இதன்மூலம் அதிக நபர்களால் பின்தொடரப்படும் அரசியல் தலைவர் என்ற சாதனையை படைத்தார்.
  2. காங்கிரஸின் மக்களவைக் குழு துணைத் தலைவராக கௌரவ் கோகோய் தோ்வு செய்யப்பட்டுள்ளார்.
  3. திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய கற்காலக் கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  4. நேபாளத்தின் புதிய பிரதமராக கே.பி.சா்மா ஓலியை, நேபாள அதிபா் ராம் சந்திர பவுடலால் நியமித்தார்.
  5. நடப்பாண்டின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான விம்பிள்டனில், ஆடவா் ஒற்றையா் பிரிவில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
  6. இந்திய மகளிர் ‘ஏ’ அணிக்கு மின்னு மணி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these